புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2019

பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமா?

பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமஅவசரகால சட்டத்தை பயன்படுத்தி பொலிஸார் பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களுடன் தேவையில்லாமல் உரசிப்பார்த்து வருகின்றனர். அதனால் அவர்களையும் ஆயுதம் தூக்க வைக்கக்கூடாது என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

நாாளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெரும்தோட்ட காவல் துறை நிலைய பொறுப்பதிகாரிகள் சிலர் இனவாத ரீதியில் செயற்படுகின்றனர். எல்ல விளையாட்டு மைதானத்தில் எமது இளைஞர்கள் விளையாட எல்ல காவல் துறை பொறுப்பதிகாரி தடை விதித்துள்ளார். இம்மைதானம் வெள்ளைக்காரர் காலம் முதல் உள்ளது. 5 தலைமுறைகளாக எமது இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது அது தனியாருக்கு சொந்தமானதெனக்கூறி காவல் துறை பொறுப்பதிகாரி அதில் எமது இளைஞர்கள் விளையாட தடையுத்தரவு பெற்றுள்ளார்.

தோட்டக் கம்பெனி முதலாளிமார்களுடன் சேர்ந்து விருந்துகளில் பங்கேற்கும் காவல் துறை பொறுப்பதிகாரிகளே இவ்வாறான இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி போராடினார்கள். முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் தூக்கி விட்டார்கள். பெரும்தோட்ட இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப்போராட வேண்டுமென விரும்புகின்றீர்களா? என்று கேட்கின்றேன். எல்ல பொலிஸார் அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு எமது இளைஞர்களுடன் உரசிப்பார்க்க வேண்டாமென எச்சரிக்கின்றேன் என்றார்

ad

ad