புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2019

இலங்கை தமிழ் குடும்பம் ஒன்றை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கையை, அந்தநாட்டு நீதிமன்றம் நடுவானில் தடுத்து நிறுத்தியுள்ளது.

நடுவானில் தடுக்கப்பட்ட நாடு கடத்தல்
இலங்கை தமிழ் குடும்பம் ஒன்றை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கையை, அந்தநாட்டு நீதிமன்றம் நடுவானில் தடுத்து நிறுத்தியுள்ளது. நடேஸ் - பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் நேற்றிரவு 11 மணியளவில், விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் உத்தரவை பிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நடேஸ் -பிரியா தம்பதியினரை குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் நேற்று இரவு மெல்பேர்ன் தடுப்பு முகாமிலிருந்து விமான நிலையத்திற்கு இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமான நிலையத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை நடேஸ்-பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே விமானம் புறப்பட்டு விட்டதாகவும் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விமானம் நடுவானில் டார்வினிற்கு திரும்பியுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பிரியாவை அதிகாரிகள் பலவந்தமாக விமானத்திற்குள் இழுத்து சென்றனர் என்று விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சைமனே கமரோன் என்பவர் த ஏஜ்ஜிற்கு தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் எது குறித்தும் அக்கறையின்றி பிரியாவை இழுத்துச் சென்றனர்,அவர் கதறினார் இரு குழந்தைகளும் கதறினார்கள். அங்கு மிகவும் மனதை தொடும் சம்பவங்கள் இடம்பெற்றன என அவர் குறிப்பிட்டுள்ளா

ad

ad