திங்கள், ஆகஸ்ட் 05, 2019

மைத்திரி- சஜித் கூட்டு என்பது பொய்

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய கூட்டணியை உருவாக்கப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை இல்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க வேண்டிய அவசியம் சுதந்திர கட்சிக்கு கிடையாது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் போது சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கேட்டிருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுகின்றதாகவும், தற்போது ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முரண்பாடுகள் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மீண்டும் ஐ.தே.கவுடனோ அல்லாது சஜித்துடனோ இனியொருபோதும் சுதந்திர கட்சி இணையாது என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம். பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சாத்தியமாவதற்கு வாய்ப்பில்லை . தனித்து பயணிப்பது தொடர்பாக மத்திய குழு கூட்டத்தில் ஆராயப்படும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்