வியாழன், ஆகஸ்ட் 08, 2019

இராணுவ புலனாய்வாளர்கள் விடுவிப்பு

ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீதும், அவரது மனைவி மீதும் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள இராணுவ புலனாய்வாளர்கள் 8 பேரில் 6 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் அளவுக்கு சாட்சிகள் இல்லாமையால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.

கம்பஹா நீதிவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ள, இந்த விவகார வழக்கானது நேற்று இடையீட்டு மனுவொன்றின் ஊடாக சி.ஐ.டி.யினரால் மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது நீதிமன்றுக்கு விசேட அறிவித்தலை கையளித்த சி.ஐ.டி., இந்த தாக்குதல் விவகாரத்தில் கைதான 8 பேரில், இராணுவ சார்ஜன்ட் மேஜர் பிரேம் ஆனந்த உடலாகம மற்றும் புலனயவாளர் லலித் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக மட்டும் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவித்தது.

இது தொடர்பில் சட்ட மா அதிபர் தமக்கு அறிவித்துள்ளதாகவும், ஏனைய 6 பேருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஆலோசனை கிடைக்கப் பெற்றுள்ளதால் அவர்களை இவ்வழக்கிலிருந்து விடுவிக்க, அவர்களை நீதிமன்றுக்கு அழைக்குமாறும் சி.ஐ.டி. கோரியது.

அதன்படி, குறித்த 6 இராணுவ புலனயவாளர்களையும், எதிர்வரும் 23 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு கம்பஹா பிரதான நீதிவான் டி.ஏ. ருவன் பத்திரண அறிவித்தல் அனுப்பினார்.