புதன், ஆகஸ்ட் 14, 2019

யாருடனும் பேசவில்லை, எவருடனும் பேசத் தயார்

தமிழர்களுக்கான தீர்வுத் திட்டங்கள் தொடர்பாக, எந்த தரப்பினருடனும் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழர்களுக்கான தீர்வுத் திட்டங்கள் தொடர்பாக, எந்த தரப்பினருடனும் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் எந்த கட்சியுடனும் கலந்துரையாடவில்லை. ஆனால் அவ்வாறு பேசுவதற்கு கட்சிகள் அழைத்தால், தமிழ் மக்களின் நலன் சார்ந்து எந்த கட்சியினர் நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வை முன்வைக்கின்றார்களோ அந்த தீர்வு தொடர்பாக அவர்களுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளோம். யாருடன் இணைந்து பயணிக்கின்றோம் என்பதை ஊகத்தின் மூலம் கூற முடியாது. தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்க அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாட தயாராகவே உள்ளோம்” என மேலும் தெரிவித்தார்.