புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2019

ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் கோத்தாவே காரணம்இரா. துரைரெட்ணம்

வடக்கு, கிழக்கில் ஏற்பட்ட ஒட்டுமொத்தமான அழிவுகளுக்கும் காரண கர்த்தாவாக இருப்பது கோத்தாபய என்பதே உண்மை என முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார் . இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் ஏற்பட்ட ஒட்டுமொத்தமான அழிவுகளுக்கும் காரண கர்த்தாவாக இருப்பது கோத்தாபய என்பதே உண்மை என முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார் . இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அப்படிப்பட்ட கோத்தாபயவை ஆதரிக்க கூடியவாறு தமிழ் தலைமைகள் தங்களது கருத்துக்களை சொல்லுவது என்ற விடயத்தில் சரி பிழை இருக்கலாம். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அதை ஏற்று விடமாட்டார்கள். தேர்தல் ஆணைக்குழுவால் தேர்தல் திகதி அறிவிக்கப்படாத நிலையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் சந்திக்குச் சந்தி மூலைக்கு மூலை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

இதற்குரிய ஒரு எடு கோளாக மக்கள் மத்தியில் ஜனாதிபதி தேர்தலுக்கு கூடுதலான விகிதம் வாக்களிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 30 வருட காலம் தமிழ் மக்களுடைய விடுதலைக்காக போராடி மிகவும் கூர்மை தனத்தோடு வலிமையோடு துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் மிகத் துன்ப நிலைகளை சுமந்து மக்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராகின்றனர்.

மக்களின் பிரதிநிதிகள் , கட்சிகளை பொருத்தவரையில் மக்களின் ஒட்டு மொத்தமான அபிப்பிராயங்களை நிறைவேற்றும் வகையில் தேர்தலில் தங்களுடைய செயற்பாடு இருக்க வேண்டும் . இதன் பிறகுதான் இந்த கட்சித் தலைமைகள் தங்களுடைய கருத்துக்களையும் முடிவுகளையும் எடுக்க வேண்டும் அதற்கப்பால் மற்றவர்களுடைய தூண்டுதல்களுக்காக தமிழ் தலைமைகள் தங்களுடைய கருத்துகளைச் சொல்லி விடக்கூடாது .

ஆகவே எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சம்பந்தப்பட்ட விடயத்தில் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு உடந்தையாகி விடக்கூடாது அப்படி ஏமாற்ற நினைத்தால் வடக்கு கிழக்கு மக்கள் அதை நிராகரிப்பார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்

ad

ad