புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2019

புலிகளின் காலத்துப் பலம் ஒன்றை இழந்து விட்டோம் - கலங்கிய சேனாதி

போர்க் காலத்தில் அரச இராணுவம் தேமாவரி குண்டுகள், பொஸ்பரிங் காஸ் குண்டுகளை பயன்படுத்தியது என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.இன்று (14) வல்லிபுனத்தில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 13ம் ஆண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

போர்க் காலத்தில் அரச இராணுவம் தேமாவரி குண்டுகள், பொஸ்பரிங் காஸ் குண்டுகளை பயன்படுத்தியது. இதனை பலமுறை நான் பாராளுமன்றில் கூறியுள்ளேன். செஞ்சோலை படுகொலை நிகழ்ந்த போதும் அதற்கு எதிராக பாராளுமன்றில் பேசியிருந்தோம். அதனை இன்று நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால் அதன் சாட்சியாக நான் இருக்கிறேன்.

அப்போதைய ஐநா ஆணையர் யஸ்மின் சூட்காவை நாங்கள் சந்திக்க முயன்ற போது அதனை கோத்தாபய ராஜபக்ச தடுத்தார், போரை முடிந்த பின்னர் முள் வேலிகளுக்கு அடைக்கப்பட்ட மக்களை பார்க்க விடாமல் தடுத்தார். கோத்தாபய மீதும், மஹிந்த மீதும் போர்க் குற்றம் சுமத்தப்பட்டது. 2015ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் நின்ற போது விழித்துக் கொண்ட மக்கள் வாக்குகளை சரியாகப் பயன்படுத்தினர்.



தமிழீழ விடுதலை புலிகள் போராடிக் கொண்டிருந்த நேரம் ஜனநாயக ரீதியாக நாங்கள் தெரிவு செய்யப்பட்டவர்களாக இருந்த போது 2003ம் ஆண்டில் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அப்போது நாங்கள் பகிரங்கமாக அறிவித்தோம் இந்நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பில் புலிகளுடன் மட்டும் தான் பேசி தீர்மானம் எடுக்க வேண்டும் என்று கூறியதை நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

முன்னேற்ற கரமான பிரேரணைகள் அங்கு இருந்தது ஆனால் நிறைவேற்ற முடியாமல் போனது. அப்போது இருந்த உயர்ந்த பலம் தமிழர்களின் பலம் விடுதலை புலிகளின் ஆயுதப் பலம், எமக்கு மக்கள் வழங்கிய ஜனநாயகப் பலம் உலகத்திற்கு முன்னால் அதுவே பலமிக்க காலமாக இருந்தது. இன்று அதிலொரு பலத்தை இழந்து விட்டோம்.

ஏப்ரல் 21ம் திகதி ஐஎஸ்எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இறந்தவர்களின் பெரும்பாளானவர்கள் தமிழர்களாக இருந்தனர். அதற்கு முன்னர் ஐநாவில் பேசிய ஜனாதிபதி வெளிநாட்டு தலையீடுகளை ஏற்க மாட்டோம் என்று கூறினார். ஏப்ரலுக்கு பின்னர் உலகின் அனைத்து நாடுகளும் தலையிட்டது. மோசமான புலனாய்வு அமைப்பான மோசட்டும் வந்தது.



அப்போது நாங்கள் ஏப்ரலுக்கு பிறகு இங்கு தலையிடும் நாடுகள் எமது இனப்பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளுமாறு சொன்னோம். இத்தனை படுகொலை செய்தவர்கள், போர்க் குற்றங்களை செய்தவர்கள் இன்று தம்மை பாதுகாக்க பெரும் தலைவர்களாக வரத் திட்டமிட்டுள்ளனர். என்றா

ad

ad