திங்கள், ஆகஸ்ட் 19, 2019

மட்டு. பல்கலைக்கு எதிராக போராட்டம்

.


ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருமாறு கோரி, மட்டக்களப்பு – கிரானில், இன்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிரான் - புலிபாந்தகல் சுற்றுவட்டத்தில் ஒன்று கூடிய பௌத்த பிக்குகள், மற்றும் சிங்கள, தமிழ் பொதுமக்கள் மேற்படி கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருமாறு கோரி, மட்டக்களப்பு – கிரானில், இன்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிரான் - புலிபாந்தகல் சுற்றுவட்டத்தில் ஒன்று கூடிய பௌத்த பிக்குகள், மற்றும் சிங்கள, தமிழ் பொதுமக்கள் மேற்படி கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மட்டக்களப்பு - புனானைப் பகுதியில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவால் நிர்மாணிக்கப்படும் பல்லைக்கழகமானது இஸ்லாமியத் தீவிரவாத தற்கொலைதாரிகளை உருவாக்குவதற்கு மதவாத உரமூட்டும், மூளைச்சலவை செய்யும் கோட்பாடு சார்ந்த இடமாகுமென, அவர்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர்.

தொழிற்பயிற்சி நிலையமொன்றை ஆரம்பிப்பதாகக் கூறி, தான் தலைவராக நிர்வகிக்கும் ஹிரா நிறுவனத்தினூடாக ஷரியா பல்கலைக்கழகமொன்றை ஆரம்பித்துள்ளார் எனவும் இதை உடனடியாகத் தடை செய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரினர்.

“ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவோம்”, “கிழக்கு மாகாண மக்களை, தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்போம்” போன்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாதைகளை, இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.