புதன், ஆகஸ்ட் 07, 2019

முன்னாள் போராளிகளுக்குள் உருவாகும் இன்னொரு குழு

ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடு தமக்கு திருப்தியளிக்கவில்லையென, முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைந்த குழுவின் பேச்சாளர் ப.செல்வகுமார் தெரிவித்தார்வவுனியா - நெளுக்குளத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடு தமக்கு திருப்தியளிக்கவில்லையென, முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைந்த குழுவின் பேச்சாளர் ப.செல்வகுமார் தெரிவித்தார் வவுனியா - நெளுக்குளத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், முன்னாள் போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னரான எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குரியாக இருந்த நிலையில் எந்தவோர் அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாத நிலை காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், அந்நேரத்தில் புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்றவர்களின் உதவிகள் கணிசமாக கிடைத்திருந்த போதும் அது எங்களிற்கு முழுமையாக கிடைக்கப்பெறவில்லையெனவும் கூறினார்.

அந்த அடிப்படையில், வாழ்வாதாரத்தை மய்யமாக கொண்டு முன்னாள் போராளிகள் எல்லோரும் ஒரணியாக செயற்பட முன்வந்துள்ளதாகவும் கடந்த காலங்களிலே தங்களுடைய பெயர்களை பயன்படுத்திக்கொண்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் அல்லது ஜனநாயக போராளிகள் என்ற கட்சிகள் பல இருந்தும் போராளிகளுடைய, மாவீரர் குடும்பங்களுடைய வாழ்வாதாரங்களை சரியாக இனங்கண்டு தேவைகளை நிவர்த்தி செய்யாத நிலை காணப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

அதேபோன்று, விடுதலைப்புலிகளின் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி தங்களை அரவணைத்து அரசியலை செய்யாத காரணத்தினால் எங்களிற்கு வாழ்வாதார ரீதியான பல பிரச்சினைகள் தொழில் ரீதியான பிரச்சனைகள் எழுகின்றது. அதனாலேயே இவ்வாறான கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஒரு தொழில் வாய்ப்பையும் ஏற்கனவே சுயதொழிலில் ஈடுபடுபவர்களை முன்னேற்றுவதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளோம் என்றார்.

ஏற்கனவே ஜனநாயக கட்சியுடன் இணைந்த பயணித்திருந்தோம். அத்தோடு அவர்களுடைய செயற்பாடு வாழ்வாதார ரீதியான செயற்பாடாக அமையவில்லை. அத்தோடு அவர்களின் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்ததோடு பல நிகழ்வுகளையும் செய்திருந்தோம் எனவும், அவர் கூறினார்.

ஆனாலும் அவர்களின் செயற்பாடு எமக்கு திருப்தியளிக்கவில்லை. மேலும் கிழக்கு மாகாணத்தில் இருந்து வருகை தந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் இன்பராசாவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை செய்திருந்தோம். அவரும் எமது வாழ்வாதார ரீதியான எந்த செயற்பாட்டிலும் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாகவே ஏனைய போராளிகளை இணைத்து நாம் செயற்பட முன்வந்துள்ளோம் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்