வெள்ளி, ஆகஸ்ட் 30, 2019

கட்டளை முறையை மாற்ற முனைகிறார் ஜனாதிபதி ஈ.சரவணபவன்

படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கும் விவகாரத்தில் இராணுவமே இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கூறுகின்றார். ஜனாதிபதிக்கு நிறைவேற்றதிகாரம் இருக்கிறது. அவர் இராணுவத்திற்குக் கட்டளையிடலாமே தவிர, இராணுவம் ஜனாதிபதிக்குக் கட்டளையிடத் தேவையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

அத்தகையதொரு கட்டமைப்பு இலங்கையில் இல்லாத நிலையில், அவ்வாறானதொரு புதிய முறையை ஜனாதிபதி தான் கொண்டுவர முயற்சிக்கின்றார் போலும். ஜனாதிபதி காலையில் ஒன்றைக் கூறுகின்றார். மாலையில் வேறொன்றைக் கூறுபவராக இருக்கின்றார். இவை யாவும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களாகவே இருக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்