புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2019

தாத்தாவின் மண்கும்பான் காணியை விகாரை அமைக்க கொழுத்த விலைக்கு பிக்குவுக்கு விற்றாரா ஐ தே க பிரமுகர் பிரபு நேற்றுமுந்தினம் மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கும் - முருகன் கோயிலுக்குமிடைப்பட்ட பகுதியில் விசய கலாவின் தீவக இணைப்பாளர் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தீவக அமைப்பாளர் ( இக்கட்சிக்கு தீவகத்தில் சிறு அலுவலகம் கூட இல்லை ) என்றவாறும் கூவித்திரிகிற நபர் ஒருவர் பல பிக்குகளை அழைத்து வந்து ஒரு காணியை பார்வையிட்டு சென்றுள்ளார். பின்பு அப்பகுதி மக்களின் தகவலின்படி இக்காணியானது இவரது தாத்தாவின் உரிமக்காணியென்றும் அதனையே இந்த பிரபு எனும் சட்டவிரோத மண்கடத்தல் வியாபாரி தென்னிலங்கை பிக்குகளுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் ஆதாரங்களுடன் தகவல்களை தெரிவிக்கின்றனர். விரைவில் விகாரையொன்றினை அக்காணியில் அமைக்கும் எண்ணத்துடனேயே பிக்குகள் அக்காணியை பார்வையிட்டு சென்றுள்ளனர் .

இந்த நபர் தனது பெயருக்கு முன்னால் #மண்கும்பான் எனும் அடைமொழியை வைத்திருந்தாலும் ஒருநாளும் ஊரில் தங்கியதில்லையென்றும் யாழ் ஆரியகுளம் நாகவிகாரையிலே தான் பல ஆண்டுகளாக வசித்துவருபவரென்றும் நீண்டகாலமாக மண்கும்பான் மற்றும் சாட்டி பகுதி கடற்கரைகளில் சட்டவிரோதமாக மண் அள்ளி அதனை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருபவரென்றும் கடந்த பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்ட இவருக்கு நாற்பது வாக்குகள் கூட கிடைக்கப்பெறவில்லையென்றும் ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

ad

ad