செவ்வாய், ஆகஸ்ட் 27, 2019

மைத்திரியை சந்திக்கவுள்ள கூட்டமைப்பினர்

வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்து நடவடிக்கைகள் மற்றும் காணி விடுவிப்புகள் குறித்தும் அரச அதிகார சபைகளினால் அண்மைகால காணி அபகரிப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மீண்டும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.

வடக்கின் இராணுவ முகாம்கள் அகற்றல் நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் விசேட அழுத்தங்களை கொடுப்பதாக கூட்டமைப்பு கூறுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வடக்கு அபிவிருத்தி விடயங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது