புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2019

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததும், தூதரக உறவை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விவாதிப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி பாவத் சவுத்ரி, இந்தியா உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும் என கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘‘இந்திய தூதர் ஏன் இங்கே இருக்கிறார்? நாம் ஏன் தூதரக உறவுகளை துண்டிக்கவில்லை? இரு நாடுகளுக்கும் இடையில் தூதரகம் இல்லாதபோது, அங்கு (இந்தியாவில்) நமது தூதர் என்ன செய்கிறார்?’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.


மேலும், ‘‘காஷ்மீர் மற்றொரு பாலஸ்தீனமாக மாற பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது’’ என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ‘‘பாகிஸ்தான் போருக்கு பயப்படக்கூடாது, ஏனென்றால் எதையும் விட மரியாதை முக்கியமானது. மரியாதைக்காகத்தான் போர்கள் நடக்கின்றன. எனவே வெற்றியோ அல்லது தோல்வியோ நிச்சயமாக போரிட வேண்டும்’’ என்றார். முன்னதாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது, ‘‘காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தை அணுகலாம்’’ என கூறினார்.

இதற்கிடையே பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கமிட்டி அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவிற்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுடன் தூதரகரீதியிலான உறவை குறைக்கவும், வர்த்தகத்தை நிறுத்தவும் பாகிஸ்தான் முடிவு செய்து உள்ளது. மேலும் இருநாடுகள் இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்களை ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை வெளியேற்றுகிறது, வணிக உறவை ரத்து செய்கிறது என ஏஎப்பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad