புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2019

குப்புற வீழ்ந்த மீனவ சம்மேளனம்?

வடக்கிற்கான மைத்திரியின் விஜயத்தின் போது எதிர்த்து போராடப்போவதாக சொன்ன வடமராட்சி வடக்கு மீனவ சம்மேளனப்பிரதிநிதிகள் கடைசியிவ் அவரை வரவேற்று நினைவுப்பரிசில் பிடித்துக்கொண்டு புகைப்படமும் பிடித்துக்கொண்ட பரிதாபமும் நடந்தது.

தெற்கு மீனவர்களது அத்துமீறலை தடுக்காவிட்டால் மைத்திரியின் வருகையின் போது எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி வடமராட்சி வடக்கு மீனவ சம்மேளனப்பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர்.


அதேவேளை உள்ளுர் மீனவர்களை புறந்தள்ளி அமைக்கப்படும் துறைமுகத்திற்கு எதிராக போராடப்போவதாகவும் போர்க்கொடி தூக்கப்பட்டிருந்தது.

எனினும் வடமாகாண ஆளுநரது சில உறுதி மொழிகளையடுத்தே மீனவ அமைப்புக்கள் பின்வாங்கிக்கொண்டதாக தெரியவருகின்றது.

ஆனால் அதனையெல்லாம் புறந்தள்ளி பருத்தித்துறை வருகை தந்த மைத்திரிக்கு நினைவுபரிசில் வழங்கி மீனவ பிரதிநிதிகள் சிலர் காலடியில் வீழ்ந்துள்ளனர்.

இதனிடையே வடமராட்சி வடக்கு மீனவ சம்மேளன பிரதிநிதிகளது இத்தகைய பச்சோந்தி நடவடிக்கை கடுமையான சீற்றத்தை மீனவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

ad

ad