செவ்வாய், ஆகஸ்ட் 20, 2019

எல்லையை மீறுகிறது அமெரிக்கா- விமல் வீரவன்ச

இராஜதந்திர எல்லைகளை மீறி அமெரிக்கா இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது குறித்து அமெரிக்க வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்- இராணுவத்தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நியமித்தார். இந்த நியமனமானது இலங்கையின் உள்ளக விவகாரமாகும். இந்நிலையில் குறித்த நியமனம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிஸ்ட் தெரிவித்துள்ள கருத்தானது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும் என அவர் தெரிவித்தார்.