புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2019

நவம்பர் 16இல் ஜனாதிபதி தேர்தல்- இன்று தொடக்கம் கட்டுப்பணம்

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது, இதனை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது, இதனை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என்றும் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறியிருந்த நிலையிலேயே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபய ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க போட்டியிட உள்ளதாக இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இம் முறை ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் உட்பட சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக 17 பேர் போட்டியிடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கட்டுப்பணம் இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 திகதி பகல் 12.00 மணி வரை கையேற்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad