புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2019

கைதான இந்து கல்லூரி அதிபர்3 திகதி வரை மறியலில் ?
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் சதா நிமலன் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்சம் பெற்றுக் கொண்டமைக்கான போதிய ஆதாரங்களுடன் அவர் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த விடயம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் அனுமதிக்காக 50 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்டதற்கான உரிய ஆதாரத்துடன் அதிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன


இலஞ்சம் வாங்கிய வேளை கையும் மெய்யுமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 50 ஆயிரம் ரூபா
லஞ்சம் பெற்றுக் கொள்ள முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே அதிபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இதனிடையே கடந்த புதன்கிழமை இந்துக் கல்லூரியின் அதிபர் கைது செய்யப்பட்டுவிட்டதாக பரபரப்பான செய்திகள் வெளிவந்திருந்தது.


எனினும் அன்றைய தினம் அவரை கைது செய்ய முற்பட்டவேளை வடக்கு ஆளுநர் அலுவலகம் மற்றும் பாடசாலையின் பழைய மாணவ பிரதிநிதியான அரசியல் ஊடக பிரமுகர் ஆகியோர் தலையிட்டு கைதை தடுத்ததாக தெரியவருகின்றது.

எனினும் காத்திருந்து இன்றைய தினம் மீண்டும் புதிய நபரொருவர் ஊடாக இலஞ்சத்தை கொடுக்க வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முழுமையான ஆதாரங்களும் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

ad

ad