புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2019

50 ரிஐடி அதிகாரிகள் மீது சித்திரவதை குற்றச்சாட்டு

இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் 50 அதிகாரிகள் சித்திரவதை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் 50 அதிகாரிகள் சித்திரவதை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குற்றம்சாட்டியுள்ளார்.

சுமார் 73 பேரிடம் மேற்கொண்ட நேர்காணலின்படி 58 அதிகாரிகள் குற்றம் இழைத்துள்ளதாக சூக்கா குறிப்பிட்டுள்ளார்.இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னரே ஐக்கிய நாடுகளின் அறிக்கைகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர்கள். இதில் ஒருவர் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையிலும் அங்கம் வகித்துள்ளார்.

இலங்கையின் படை அமைப்பை மீளமைக்கப் போவதாக கூறும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டு வியப்பை அளிப்பதாக சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

இந்த சித்திரவதை சம்பவங்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் கொழும்பு அலுவலகம், பூஸா தடுப்பு முகாம் போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளதாக சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சித்திரவதைகள் காரணமாக 20பேர் வரை தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் சூக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad