புதன், செப்டம்பர் 04, 2019

பலாலி துப்பாக்கிச் சூட்டில் சிப்பாய் படுகாயம்

பலாலி இராணுவ முகாமுக்குள், இன்று அதிகாலை புகுந்த மர்மநபர்கள், பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றுஅதிகாலை பலாலி இராணுவ முகாமில் கடமையில் இருந்த 21 வயதுடைய நிசாந்த என்ற இராணுவ சிப்பாய் , தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டதாக செய்தி வெளியாகியது. எனினும், இந்தச் செய்தியை மறுத்த பாதுகாப்புத் தரப்பினர், ஓட்டோவில் வந்த மர்மநபர்களே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறினர்.

இதில் படுகாயமடைந்த இராணுவ சிப்பாய், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், சுயநினைவற்ற நிலையில் இருப்பதால் மேலதிக தகவல்களை அவரிடம் இருந்து பெற முடியாதிருப்பதாகவும் கூறப்படுகிறது.