சனி, செப்டம்பர் 07, 2019

யாழ்.நகரில் உதயமாகும் புதிய பேருந்து தரிப்பிடத்தை பார்வையிட்டார் ரணில்!

யாழ் நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற பேருந்து நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமிங்க பார்வையிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஐயம் செய்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.

இதற்கமைய யாழ் மாநகர சபையால் நகர மத்தியில் அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையத்தை சென்று பார்வையிட்டுள்ளார்

இதன் போது நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்