திங்கள், செப்டம்பர் 30, 2019

அடையாள அட்டைகள் இரண்டு உள்ளதா?போட்டியில் இருந்து விலகுவார் கோத்தா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த வாரம் போட்டியில் இருந்து விலகுவார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரட்ன இந்தத் தகவலை வெளியிட்டார்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு தேசிய அடையாள அட்டைகள் இரண்டு உள்ளதாகவும், இது தொடர்பில் இரகசிய பொலிஸாரினால் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

குடியுரிமையை மோசடி செய்து பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாதென தடை உத்தரவு ஒன்று பெறப்படும் என அவர் கூறியுள்ளார்.