சனி, செப்டம்பர் 28, 2019

பணத்தை சுருட்டிய ஐங்கரன் கருணாமூர்த்தி! பேரதிர்ச்சியில் லைகா குழுமம்

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய படத் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தில் நடந்திருக்கும் ஊழல் மற்றும் கையாடல் பற்றிய செய்தி தென்னிந்திய சினிமா வாட்டத்தைபரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

மற்றொரு படத் தயா


ரிப்பு நிறுவனமான ஐங்கரன் நிறுவனத்தின் தலைவரான கருணாமூர்த்தியும் அவரது பெண் உதவியாளரான பானும் இணைந்து தங்களுடைய நிறுவனத்தில் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் கையாடல் செய்தும், பலவிதங்களில் நிறுவனத்திற்கு செலவுகளை வைத்து இதன் மூலம் நிறுவனத்திற்கு பெருத்த பண இழப்பை ஏற்படுத்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக சொல்லி அவர்கள் இருவர் மீதும் லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம், சென்னை காவல்துறையில் நேற்று புகார் ஒன்றை கொடுத்துள்ளது.


புகார் கொடுத்தக் கையோடு புகார் பிரதிகளையும் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறது லைகா நிறுவனம்.
லைகா நிறுவனம் கருணாமூர்த்தி மீது சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுக்களின் சுருக்கம் இங்கே :