புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2019

புலிகளுக்கு பயந்து கோழை போல ஒளிந்தவர் கோத்தா!

விடுதலைப் புலிகளுடனான போரின்போது கோத்தாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி ஒரு கோழை போல் மறைந்திருந்தார் என்றும், அவரது சகோதரர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்தே நாடு திரும்பினார் என்றும் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான போரின்போது கோத்தாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி ஒரு கோழை போல் மறைந்திருந்தார் என்றும், அவரது சகோதரர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்தே நாடு திரும்பினார் என்றும் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

மத்துகம பொது விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் பேரணி ஆரம்பமாகியது. ‘சஜித் வருகின்றார்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“யுத்தம் இடம்பெற்றபோது கோத்தாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி ஒரு கோழை போல் மறைந்தார். அவரது சகோதரர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே நாடு திரும்பினார்.

சஜித் பிரேமதாச நல்ல விடயங்களை செய்யக்கூடிய ஒரு தலைவர். வீடு அமைச்சினால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டினார். அவருக்கு நிதி அமைச்சு அல்லது பெற்றோலிய அமைச்சு வழங்கப்பட்டிருந்தால் அவர் நாட்டை இன்னும் முன்னோக்கி கொண்டு சென்றிருப்பார்.

அவருக்கு உதவ தயாராக இருக்கும் நல்ல தலைவர்கள் குழு சஜித் பிரேமதாசாவைச் சுற்றி உள்ளது. இது எங்கள் பொற்காலம், 2025 ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு போட்டியாக இலங்கையில் உட்கட்டமைப்பை உருவாக்க முடியும்.

சஜித் பிரேமதாசவுக்கு 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் எங்கள் வேட்பாளர் இருந்தபோதிலும், எங்கள் கட்சி ஒரு வேட்பாளரை வாடகைக்கு எடுத்தது.

ஆனால் தற்போது அமைச்சர் சஜித் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து ராஜபக்ஷ குடும்பம் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்துள்ளது” என கூறினார்.

ad

ad