புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2019

வட-கிழக்கு இணைப்புடன் சுயநிர்ணய உரிமை

வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளது. யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அங்கு தொடர்ந்துரைத்த அவ்வியக்கத்தினர், தேசிய மக்கள் சக்தியால், நாட்டில் அனைத்து மக்களுக்குமான வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வரைபு ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டும் உருவாக்கவில்லையெனவும் இது இறுதியான வரைபல்ல எனவும் தெரிவித்தனர்.

நாட்டில், அனைத்து மாகாணங்களில் உள்ள மக்களுடன் பேசி அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான திட்டங்களும் அந்த வரைபில் இணைத்துக் கொள்ளப்படுமெனத் தெரிவித்த அவர்கள் இறுதியாக. முழுமையான திட்டமாக அது மாற்றப்படுமெனவும் கூறினர்.

அரசியலில் 3ஆவது பாதை தேவை என்பதை யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களும் ஏற்கின்றார்களெனத் தெரிவித்த அவர்கள், அதற்காக முற்போக்கு சிந்தனை உள்ள தமிழ் மக்கள் எங்களுடன் கைகோர்க்க வேண்டுமெனவும் கூறினர்.

காலிமுகத்திடலில் கூடிய கூட்டத்தைப் போன்று, யாழ்ப்பாணத்தில் மக்கள் அலை ஒன்றை திரட்ட உள்ளதாகத் தெரிவித்த அவர், அதில் தமது ஜனாதிபதி வேட்பாளர் மக்கள் முன்தோன்றி பேசுவாரெனவும் அவருடனும் மக்கள் பேச முடியுமெனவும் கூறினர்.

தலைவர் பேசுவதை மக்கள் கேட்க வேண்டுமெனவும் அதே போன்று மக்கள் பேசுவதை தலைவர் கேட்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.

ad

ad