புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2019

விரைவில் கம்பீரமான அழகிய யாழ்.நகர்சுற்றுலாப் பயணிகளை தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும

விரைவில் கம்பீரமான அழகிய யாழ்.நகர்சுற்றுலாப் பயணிகளை தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும். அதற்கான மூலோபாயங்கள் என்ன என்பதை சிந்தித்து வருகின்றோம். அதற்கான திட்டங்களை உருவாக்கி வருகின்றோம். இதனை பிரதான சுற்றுலா வலயமாக்கவுள்ளோம்.

கம்பீரமாக எழுந்து நிற்கும் அழகிய நல்லூர் ஆலயம் போல் அனைவராலும் பேசப் படக்கூடிய புதியதொரு யாழ்ப்பாணம் நகரம் கட்டியெழுப்பப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர கட்டடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டிய போது இதனைத் தெரிவித்தார்.
கம்பீரமாக எழுந்து நிற்கும் அழகிய நல்லூர் ஆலயம் போல் அனைவராலும் பேசப் படக்கூடிய புதியதொரு யாழ்ப்பாணம் நகரம் கட்டியெழுப்பப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர கட்டடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டிய போது இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர மண்டபத்திற்கு நாம் இன்று அடிக்கல் நாட்டியுள்ளோம். இது யாழ்ப்பாணத்திற்கு அழகிய மண்டபமாக இருக்கப் போகிறது. நல்லூர் ஆலயம் எந்தளவு அழகியதொரு கம்பீரமாக எழுந்து நிற்கின்றதோ அதேபோல் எல்லோராலும் பேசப்படக்கூடிய அழகான புதியதொரு யாழ்ப்பாணம் நகரத்தை கட்டியெழுப்பப்பும் மாபெரும் திட்டம் இது என்பதை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் என்னிடம் எப்போது கட்டடம் வரப்போகிறது. எப்பொழுது நிதி ஒதுக்கப்போகிறீர்கள்? எப்பொழுது இதை செய்யப்போகிறீர்கள்? என தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார். என்னிடம் கேட்பார். அமைச்சிடம் கேட்பார். இப்படியாக யாழ் மாநகரத்தை கட்டியெழுப்பும் பணியில் அவரது பங்களிப்பு பாராட்ட வேண்டியதாகும். இவ்வாறானவர்கள் தான் எமக்கு கட்டாயமாக தேவையாகும்.

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபம் அமைக்க இந்தியா நிதி உதவியளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோல் சந்தைத் தொகுதியை அமைத்து வருகின்றோம். நெடுந்தூர பஸ் நிலையக் கட்டடம் அமைக்கப்படுகிறது. மேலும் பலாலி விமான நிலையத்தை நாம் யாழ்ப்பாணம் விமான நிலையம் என்கின்ற பெயரில் அபிருத்தி செய்து வருகின்றோம்.

முதலாவது கட்டமாக இந்தியாவுக்கு மாத்திரம் தான் விமான சேவை இடம்பெறும். ஆனாலும் காலக்கிரமத்தில் அது சர்தேச மட்டத்தில் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்யும் விமான நிலையமாக மாறும் என்பதை கூறிக்கொள்கின்றேன். இதன்மூலம் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தியடையும்.

சுற்றுலாப் பயணிகளை இந்த பிரதேசத்திற்கு ஈர்த்துக் கொள்வதற்கு குறிப்பாக தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும். அதற்கான மூலோபாயங்கள் என்ன என்பதை சிந்தித்து வருகின்றோம். அதற்கான திட்டங்களை உருவாக்கி வருகின்றோம். இதனை பிரதான சுற்றுலா வலயமாக்கவுள்ளோம்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிருத்தி செய்துவருகிறோம் அத்துடன் சீமெந்து தொழிற்சாலையையும் மீள இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். புதிய தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ளோம். கிளிநொச்சி, பூநகரியையயும் அபிவிருத்தி செய்யவுள்ளோம். அதுபோல் யாழ்ப்பாணத்தில் வர்த்தகம் தொழிற்முயற்சிகளையும் கட்டியெழுப்பவுள்ளோம் இதற்கென புதிய நிதியத்தை ஸ்தாபிக்கப்படும்'என்றார்.

ad

ad