புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2019

தமிழர்களை கொன்ற ராஜீவ்காந்தி தமிழர்களின் நிலத்தில் கொன்று புதைக்கப்பட்டார் என வரலாறு திருத்தி எழுதப்படும்; சீமான் மீது வழக்கு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்திற்காகவே இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.,

இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகம் விக்ரவாண்டி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், ராஜீவ்காந்தி கொலையை குறிப்பிட்டுப் பேசினார். ராஜீவ்காந்தியை தாங்கள்தான் கொன்றோம் என்பது சரிதான் என்றும், அமைதிப் படையை அனுப்பி தமிழர்களை கொன்றுகுவித்த ராஜீவ்காந்தி தமிழர்களின் தாய் நிலத்தில் கொன்று புதைக்கப்பட்டார் என வரலாறு ஒருநாள் திருத்தி எழுதப்படும் என்றும் சீமான் கூறினார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைவர்களை அவதூறாக பேசுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல் என 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ad

ad