புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2019

ஒரே நாளில் 96 முறைப்பாடுகள்

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது என்று கெபே அமைப்பு தெரிவிக்கின்றது.
இவ்வாறு பதிவாகியுள்ள முறைப்பாடுகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நேற்றைய தினமே அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகிள்ளதாக அந்த அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவங்ச தெரிவிக்கின்றார்.



இதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் தமக்கு 96 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் 7 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், அவை அனைத்தும் தேர்தல் சட்ட விதி மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் மூன்று வேட்பாளர்களின் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று, வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் பாரியளவிலான பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

ad

ad