புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2019

வெள்ளைக்கொடியோடு வந்தோரை சுட்டுக்கொன்ற பிசாசு கோட்டாபய! சரவணபவன் ஆக்ரோஷம்

வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு வந்த மக்களைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று சொன்னவன், அவன் மாமிசம் உண்பவனல்லன். முள்ளிவாய்க்காலில் தன்னுடைய உத்தரவை அவர் வழங்குகின்றார். அனைவரும் சுட்டுத் தள்ளப்படுகின்றார்கள். அவரை மறந்துவிடாதீர்கள். மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாது என்பதற்கு எமக்கு உத்தரவாதம் இல்லை. அப்படிப்பட்ட கொடிய பிசாசுக்கு நாம் எவ்வாறு வாக்களிப்பது.

– இவ்வாறு மிகுந்த ஆக்ரோசத்துடன் கருத்துத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.



கைதடி வடக்கு சனசமூக நிலைய நவராத்திரி விழா நேற்று சனிக்கிழமை நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராகக் கலந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்தவை வருமாறு;-

நான் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தெரிவிக்கும் கருத்து தமிழரசுக் கட்சியினுடையதோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ கருத்து அல்ல. எனது தனிப்பட்ட கருத்து. தற்போது பல்வேறு அபிவிருத்திகள் இந்த அரசில் நடைபெறுகின்றன. சஜித் ஜனாதிபதியாகினாராகில் இந்த அபிவிருத்திகள் தொடரும்.

கோத்தாபயவுடன் சேர்ந்து ஓடப்போபவர்களைப் பாருங்கள். அவர்கள் தமிழர்களுக்குஎதிரானவர்கள். டக்ளஸ் தேவானந்தா என்றாலும் சரி, கருணா, பிள்ளையான் என்றாலும் சரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஊடாக அராஜகம் நடத்திய வரதராஜப்பெருமாள் என்றாலும் சரி எல்லாரும் சொல்கின்றார்கள் தமிழர்களைத் துவம்சம் பண்ணியவனைத்தான் காக்கப்போகின்றோம் என்று. என்ன நடக்குமோ கடவுளுக்குத்தான் தெரியும். கடவுள்தான் எங்களைக் காப்பாற்றவேண்டும். அது ஏற்கனவோ சொல்லப்பட்ட ஒன்று.

மஹிந்தவின் அரசு போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தாங்கள் தமிழர்களைக் கௌரவமாக நடத்துவோம் தமிழ் பிரதேசங்கள் எல்லாம் அபிவிருத்தி செய்யப்படும் என்று சர்வதேசத்திடம் சொன்னார்கள். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. உலக நாடுகளுக்கு அவர்கள் பொய்யை சொல்லிவிட்டு இங்கு மறைப்பார்கள். ஒரு உடைந்த பள்ளிக்கூடத்தைத் திருத்தி வர்ணம் பூசிவிட்டு உலகநாடுகளுக்கு இங்கு அபிவிருத்தி இடம்பெறுவதாக பொய் கூறினார்கள். நிச்சயமாக கோட்டாபய தமிழர்களுக்கு எதுவும் செய்யமாட்டார். அவருக்கு தமிழர் விரோதிகள். தமிழருக்கும் அவர் விரோதி.

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் என்னுடைய பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து சுட்டார்கள். வழக்குத் தாக்கல் செய்யுங்கள் சுட்டவர்களை அடையாளம் காட்டுகின்றோம் என்று தெரிவித்தோம். வழக்கு போடுகின்றார்கள் இல்லை. அதைக் காப்பாற்றியவர் – டக்ளஸ் தேவானந்தாவைக் காப்பாற்றியவர்கள் – பஷில் ராஜபக்ஷ அவர்கள்.

நாங்கள் அஹிம்சை, ஆயுதம் என்று போராடி தற்போது ராஜதந்திரத்தில் நிற்கின்றோம்.தென்னிலங்கைத் தலைவர்கள் எவரும் தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் தரமாட்டார்கள்.நாங்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றோம். சஜித் வந்து என்ன செய்யப்போகின்றார் என்று பார்ப்போம்? – என்றார்.

ad

ad