புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2019

பொலிசாரின் பொய் வழக்கு - ஆறுதல் அளிக்கும் தீர்ப்பு

மாவீரா் நாளை ஒட்டி மாணவா்களுக்கு புத்தக பைகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டி, பின்னா் வீடொன்றில் கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டி சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான தமக்கு ஆறுதலளிக்கும் வகையில் நீதி கிடைத்துள்ளதாக புன்னாலைகட்டுவன் பகுதியை சோ்ந்த து.லோகேஸ்வரன் என்பவா் தெரிவித்தார்.

தம் மீதான பொய் குற்றச்சாட்டு மற்றும் சித்திரவதை, கொலை ஆகியவற்றுடன் தொடா்புடைய பலா் இன்னும் வெளியில் இருக்கும் நிலையில் இந்த குற்றவாளிகளுக்கும் தண்டணை வழங்கப்படவேண்டும். என கேட்டுள்ளதுடன். தாம் சுதந்திரமாக வாழ வழி செய்யப்படவேண்டும் எனவும் கேட்டுள்ளாா்.

நேற்று யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளா்களை சந்தித்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடா்பாக கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

2011ம் ஆண்டு காா்த்திகை மாதம் 21ம் திகதி பெற்றோரை இழந்த பாடசாலை மாணவா்களுக்காக 110 புத்தக பைகளை தற்போதைய யாழ்.மாநகர முதல்வா் இ.ஆனல்ட் வழங்கியிருந்தாா். அதனை நானும், சுமணன் உள்ளிட்ட சிலரும் இணைந்து மாணவா்களுக்கு வழங்கினோம். அப்போது அங்குவந்த இராணுவ புலனாய்வாளா்கள், மாவீரா் நாளுக்காக புத்தக பைகளை வழங்குகிறீா்களா?என கேட்டிருந்தனா். ஆனால் அப்படியான நோக்கத்தில் நாங்கள் புத்தக பைகளை கொடுக்கவில்லை. என்பதை அப்போதே கூறியிருந்தோம்.

பின்னா் அன்றைய தினம் இரவு 10 மணியளவில் எங்கள் வீட்டுக்குள் நுழைந்த இராணுவத்தினா், மற்றும் பொலிஸாா் வீடொன்றுக்குள் புகுந்து பல லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டி என்னையு ம், சுமணனையும் கைது செய்தாா்கள். கொள்ளை நடந்ததாக கூறப்பட்ட வீட்டின் உாிமையாளரான பெண்,அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாியுடன் மிக நெருக்கமான உறவை பேணிய ஒருவா். இந்நிலை யில் கைது செய்யப்பட்டு நேரடியாக ஊரெழு இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட நாம் அங்கு தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம்.

எனது உடலில் மின்சாரம் பாய்ச்சினாா்கள், சூடேற்றப்பட்ட கம்பிகளால் சுட்டாா்கள், பிளேட்டுகளால் வெட்டினாா்கள். பின்னா் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கும் சித்திரவதை மேற்கொண்ட நிலையிலேயே சுமணன் உயிாிழந்தாா். பின் 5 நாட்கள் கடந்த நிலையில் 2011 காா்த்திகை 26ம் திகதி நீதிமன்றில் ஆஜா் செய்யப்பட்டு,பிணையில் விடுதலை செய்யப்பட்டோம்.

களவு எடுத்ததாக சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு தொடா்பான வழக்கு நடை பெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விடயத்தை நாங்கள் நீதிபதிக்கு கூறியதன் அடிப்படையில் சம்மந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றாா்கள். மறுபக்கம் சுன்னாகம் பொலிஸாா், இராணுவத்தினா் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாியுடன் நெருக்கமான உறவை பேணிய பெண் ஆகியோாினால் சோடிக்கப்ப ட்ட கொள்ளை வழக்கும் பொய் வழக்கு என்பது நீதிமன்றத்தால் கூறப்பட்டுள்ளதுடன், குறித்த பெண் மீது இழப்பீடு கோாி சிவில் வழக்கு தொடருமாறும் நீதிபதியால் கூறப்பட்டிருக்கின்றது.

இந்த நீதி எமக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், சித்திரவதை மற்றும் கொலைகளுடன் சம்மந்தப்பட்ட பலா் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கின்றாா்கள். 2018ம் ஆண்டு நவம்பா் மாதம் என்னுடைய தலையில் துப்பாக்கியை வைத்து சாட்சி சொல்வதற்காக செல்லக்கூடாது என அச்சுறுத்திய பொலிஸ் அதிகாாி இன்னும் வெளியில் நடமாடுகிறாா்.

மேலும் கடந்த வருடத்தின் கடைசிவரையில் புலனாய்வாளா்கள் என்னை நிம்மதியாக வாழவிடவில்லை. இது மோசமான இன அழிப்பு எப்படி நடந்தது என்பதற்கு உதாரணமும் கூட. அதேபோல் புத்தக பைகளை வழங்கிய இப்போதைய யாழ்.மா நகர முதல்வா் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா் சரவணபவன் ஆகியோரும்,எங்கள் விடயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 5 பிள்ளைகளுடன் என்னுடைய மனைவி இவா்களிடம் உதவி கேட்டபோது இவா்கள் தொலைபேசியை ஓவ் செய்து வைத்தவா்கள். ஆனால் சட்டத்தரணி மணிவண்ணன் ஒரு ரூபாய் பணமும் கேட்காமல் 8 வருடங்கள் வழக்கை நடாத்தி நீதியை பெற்றுக் கொடுத்தாா் என்றாா்.

ad

ad