புதன், அக்டோபர் 02, 2019

கோத்தாவின் வாயை மூடி வைத்துள்ள சட்டத்தரணிகள்

ஊடகங்கள் முன் கருத்து தெரிவிப்பதை தவிர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ சட்ட ஆலோசனையின் அடிப்படையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வருகிறார் என அவரது பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளா
அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதனால், முடிந்தவரை ஊடகங்களிலிருந்து விலகி, நீதிமன்ற வழக்குகளை பாதிக்கக்கூடிய அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அவரது சட்டத்தரணிகள் அறிவுறுத்தியுள்ளனர் .கோத்தாபய ராஜபக்ஷ வேண்டுமென்றே ஊடகங்களைத் தவிர்க்க முயற்சிக்கவில்லை. அவர் விரைவில் ஊடகங்களுக்கு பதிலளிப்பார் என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.