புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2019

சிவாஜிக்கு மனோ நோய்: சீறும் டெலோ?

எந்த தேர்தல்கள் வந்தாலும் சிவாஜிலிங்கம் போன்றவர்களுக்கு மனநோய் ஏற்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளர் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரனுடன் இணைந்து நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலும் செய்துள்ளார் .

நாங்கள் பல நெருக்கடியான காலகட்டத்தில் பல்வேறு தேர்தல்களைச் சந்தித்துள்ளோம். 2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் போர்வைக்குள் வந்தவர்கள் அவர்களின் தனிப்பட்ட சுயலாபங்களை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.
சிவாஜிலிங்கம்இதேபோன்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார். அப்போதே இவருக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள கட்சியினால் முடிவெடுக்கப்பட்டது.
இருப்பினும் எமது சகோதர கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்களின் ஆலோசனைக்கமைவாக அச்செயற்பாடு நிறுத்தப்பட்டது. ஆனால் அவர் திரும்பவும் இவ்வாறானதொரு செயற்பாட்டினைச் செய்திருக்கின்றார்.
இதனை இவ்வாறே விட்டுவிட முடியாது இவருக்கான தகுந்த நடவடிக்கை எடுத்தே தீருவோம். எந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்ற ஒருவகையான மனநோய்க்கு சிவாஜிலிங்கம் உள்ளாகியுள்ளாரோ தெரியவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad