புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2019

வாகனம் மோதி தள்ளியதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பலி-முல்லைத்தீவு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு முன்பாக நேற்று (07) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதோடு மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

பாடசாலைக்கு முன்பாக வீதியில் சைக்கிளில் சென்ற மாணவர்களை கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வந்த வாகனம் மோதி தள்ளியதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் பலியாகியதுடன் மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் காரணமாக ஆத்திரமடைந்த மக்கள் பாடசாலை முன்பாக குவிந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வாகனச் சாரதி பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படும் நிலையில் அவருக்கு சாதகமாக செயற்படுவதாக தெரிவித்து மக்கள் கொதித்தெழுந்துள்ளதால் கொக்குதொடுவாயில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

செல்வரத்தினம் கேதீஸ் (வயது11) என்ற மாணவனே பலியாகியுள்ளார். மிகவும் வறுமைகோட்டுக்குள் வாழும் குறித்த மாணவன் கல்வி செயற்பாடுகளில் சிறந்து விளங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad