புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2019

தலைவன் வேண்டுமா? கொலையாளி வேண்டுமா?ரணில்

ஜனாதிபதி பொதுமக்களின் தலைவராக இருக்க வேண்டுமா அல்லது ஒரு கொலையாளியாக இருக்க வேண்டுமா என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (10) காலிமுகத்திடலில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

மேலும்,

நாட்டு மக்களுக்கு தேவை மக்களை காக்கும் தலைவனா அல்லது மக்களை கொலை செய்யும் தலைவனா. மக்களை காக்கும் தலைவன் வேண்டுமானால் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து அவரை நாட்டில் ஜனாதிபதி ஆக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் நாட்டுமக்களை கொலை செய்யும் தலைவனை மக்கள் எதிர்பார்ப்பார்களாயின் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள்.

சஜித் பிரேமதாசவை நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த பின்னர் எமது எதிரணியினர் காலம்சென்ற எமது ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.



அன்று அவருடன் ஒன்றாக வேலை செய்த அமைச்சர் என்ற வகையில் நான் இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். ரணசிங்க பிரேமதாச காரணமாகவே ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தேர்தலில் ஐந்தில் ஒரு பெரும்பான்மை பலத்தில் வெற்றிபெற்றார்.

ரணசிங்க பிரேமதாசவே குடும்பவாதம், ஏற்றத்தாழ்வுகளை இல்லாதொழித்து நாட்டை நல்ல நிலைமைக்கு கொண்டு கொண்டு நடவடிக்கை எடுத்தார். நான் ரணசிங்க பிரேமதாசவின் அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக பணியாற்றினேன்.

அவர் தெளிவான நோக்கத்துடனேயே நாடு முழுவதும் 200 ஆடைத் தொழிற்சாலைகளை திறக்க காரணமாக இருந்தார். அவர் செய்த வேலைகளையே சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாங்கள் முன்னெடுக்க உள்ளோம்.



ஹம்பாந்தோட்டையில் 10 ஆயிரம் ஏக்கரில் தொழிற்பேட்டை தேவையில்லையா என்று மஹிந்த மற்றும் கோட்டாபய ஆகியோரிடம் கேட்கின்றேன். காலிமுகத்திடல் மைதானத்தை மேலும் 40 மீற்றர்கள் கடல் பக்கம் விரிவுப்படுத்த எண்ணியுள்ளோம். இதேபோன்று பாரிய மாற்றங்களை ஏற்படுத்த எண்ணியுள்ளோம்.

சஜித் பிரேமதாச அரசியலுக்கு வந்த போது, ஏன் மத்திய கொழும்பை தெரிவு செய்யவில்லை என்று கேட்டேன். அப்போது தனக்கு ஹம்பந்தோட்டை தருமாறு கேட்டார். வறிய மக்களோடு இருக்க வேண்டும் என அவர் என்னிடம் கூறினார்.



அன்றில் இருந்து வறிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, குடும்பவாதத்தில் இருந்து மக்களை மீட்டெடுத்து, மக்கள் மத்தியில் இருந்து சஜித் பிரேமதாச தலைவராக உருவாகியுள்ளார். - என்றார்.

ad

ad