புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2019

எங்களிடம் இருந்து எந்த பகுதியையும் துருக்கி கைப்பற்றவில்லை! முகிலினி October 12, 2019 உலகம்

சிரியாவில் தங்கள் வசமுள்ள பகுதியைத் துருக்கியிடம் இழக்கவில்லை என்று குர்தியப் படையினர் தெரிவித்துள்ளனர்.

isis க்கு எதிராக நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து விலகியதையடுத்து குருதிஷ்  இனவிடுதலைப் படைக்கு எதிராக துருக்கி தனது மூர்க்கத்தனமான தாக்குதலை குருதிஷ்மக்கள் மீது தொடுத்துள்ளது.

முன்னதாக போர் நடக்கும் பகுதியான ராஸ் அல் அய்ன் வட்டாரத்தை  கைப்பற்றி விட்டதாகத் துருக்கி அறிவித்துள்ள போதும், சிரியா - துருக்கி எல்லையில் உள்ள ராஸ் அல் அய்ன் வட்டாரம் இன்னமும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகக் குர்தியப் படையினர் கூறுகின்றனர்.

குர்திஷ் இன மக்கள் மீது கடந்த நான்கு நாட்களாக துருக்கி நடத்திவரும் தாக்குதலில் குர்திஷ் பொதுமக்கள் முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்,
 சுமார் 2 லட்ச்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை தேடி இடம்பெயர்ந்து உள்ளதாகவும்  சர்வதேச உடகங்கள் தெரிவிக்கின்றது

ad

ad