புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 டிச., 2019

தனி நாடு கோரும் ஸ்கொட்லான்ட்! சமாளிப்பாரா புதிய பிரித்தானிய பிரதமர்?

பொறிஸ் ஜோன்ஸன் ஆகிய போஜோ இப்போது பிரித்தானிய அரசியலில் இப்போது போஜோ 2.0!

இன்று அதிகாலையில் அவர் ஒரு அரசியல் எந்திரனாக மாறும் வகையில் அவரது "Get Brexit Done" என்ற பட்டயம் வேலைசெய்திருக்கிறது. பொறிஸ் ஜோன்ஸனின் இந்த உருவாக்கம் வெறுமனவே இப்போது பிரித்தானியா சார்ந்ததாக மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் வலது சாரிகளின் ஏறுமுகத்துக்குரிய இன்னொரு ஆதாரமாகவும உருவாகிவிட்டது.

மறுபுறத்தே 1935ஆம் ஆண்டுக்குப்பின்னர் மிக கடுமையாக தோல்வியை பெற்றிருக்கிறது தொழிற்கட்சி. அதிலும் தனக்கு வடஇங்கிலாந்து மற்றும் வேல்சில் பாரம்பரிமான இருக்கும் சிவப்பு சுவரின் (றெட் வோல் )சில இடங்களை எதிராளி முகாமான கென்சவேட்டிவ் தகர்க்கவும் அது அனுமதித்துள்ளது

இந்த தேர்தலில் கென்சவேட்டிவ் பெற்ற அறுதிப்பெரும்பான்மை நிலையை நோக்கும் போது பிரித்தானியாவுக்கு அபயமளிக்க தன்னைவிட ஒரு பலமான தலைவர் இல்லை என்பதை போஜோவின் 2.0 பிம்பம் நிருபித்துள்ளது

இந்த விம்பத்துடன் நேற்று பகல் பக்கிங்காம் அரண்மனைக்கு சென்று ராணி எலிசபெத்தை சந்தித்து ஆட்சியமைப்பதற்குரிய உரிமையைபெற்றுச்சென்ற அவர் இனி நாடாளுமன்றத்தால் ஏற்கனவே நிராகரிக்கபட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை வாக்கெடுப்புக்குவிட்டு அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி பிரித்தானியர்களுக்குரிய கிறிஸ்மஸ் பரிசாக வழங்குவார்

எது எப்படியோ! பிரெக்சிற்றுக்காக (Brexit) ஐரோப்பிய ஒன்றியம் விதித்த ஜனவரி 31 என்ற காலக்கெடுவுக்கு முன்னர் பிரெக்ஸிற் (Brexit) இடம்பெறும். அதன்பின்னர் அடுத்துவரும் மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வணிக உறவுகள் குறித்த சவாலுக்குரிய பேச்சுக்களை அவர் எதிர்கொள்ளவேண்டும்.

ஆனால் இன்று காலை வரலாற்று வெற்றியை பெற்ற பொறிஸ்ஜோன்சன் இனிமேல் ஐக்கிய ராஜ்யத்தை காத்துக்கொள்ள கடுமையாக சிரமப்பட வேண்டும்.

ஏனெனில் பொறிஸ்ஜோன்சனைப்போலவே, வடக்கிலும் நிக்கொலா ஸ்ருர்ஜன் முகம் எழுச்சிகொண்டுள்ளது. ஆகையால் எஸ்.என்.பி ஆகிய ஸ்கொட்லாந்து தேசியகட்சியின் தலைவராக உள்ள நிக்கொலா ஸ்ருர்ஜனும் மீண்டும் ஒருமுறை கையில் எடுத்து ஏவும் ஸ்கொட்லாந்துக்கு சுதந்திரம் கோரும் Indyref-2 சுதந்திர குடியொப்ப வாக்கெடுப்பு அஸ்திரத்தை பொறிஸ் ஜோன்சன் சமாளிக்கவேண்டும்.
ஏனெனில் தேசியரீதியில் எவ்வாறு கன்சவெட்டிவ் எழுச்சிகொண்டுள்ளதோ அதேபோலவே ஸ்கொட்லாந்தில் நிக்கொலா ஸ்ருர்ஜனின் தேசிய வாதம் வெற்றியை சுவிகரித்துள்ளது. அங்கு கன்சவேடிவ் மற்றும் லேபரை புரட்டியெடுத்த எஸ்.என்.பி அவர்களிடமிருந்து 13 ஆசங்களை மேலதிகமாக பெற்று மொத்தமாக 48 ஆசனங்களை பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் அடிப்படையில் 80 களில் மார்க்கிரட் தட்சரின் காலத்தில் எவ்வாறு ஸ்கொட்லாந்துக்கும் நம்பர் 10க்கும் இடையில் இழுபறி இருந்ததோ அதுபோலவே இனிமேலும் இடம்பெறக்கூடும்.

இந்த தேர்தலின் ஊடாக கன்சர்வேடிவ் மொத்தமாக 365 இடங்களை சுவிகரித்துள்ளது இது சாதாரண பெரும்பான்மைக்குத்தேவையான 326 ஆசனங்களை விட மிக அதிகமானதாகும். கடந்த தேர்தலில் கன்சர்வேடிவுக்கு கிட்டிய ஆசனங்களை விட 47 ஆசனங்கள் அதிகமாக கிட்டியுள்ளது.

இந்த வெற்றிக்குள் தொழிற்கட்சியின் வலுவான பகுதிகளாக கருதப்படும் வட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவற்றில் கன்சர்வேடிவ் மேவிய வெற்றியும் அடங்கும்.

அத்துடன் 2016 இல் இடம்பெற்ற பிரெக்சிற் தொடர்பான குடியொப்ப வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என வாக்களித்த பகுதிகள் யாவும் இப்போது கன்சவேட்டிவின் கைகளில்தான் விழுந்துள்ளது.

குறிப்பாக வேல்ஸ் பிராந்தியத்தில் தொழிற்கட்சி கொண்டிருக்ககூடிய பாரம்பரிய பிடி இழக்கப்பட்டு அது கன்சவேட்டிவுக்கு சென்றுள்ளது. வேல்ஸ் பிராந்தியத்தில் தொழிற்கட்சியின் 6 ஆசனங்கள் இப்போது கன்சவேட்டிவிடம் சரணடைந்து விட்டது.

இந்த தேர்தலின் ஊடாக தொழிற்கட்சி மொத்தமாக 203 இடங்களை மட்டுமே சுவிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் தொழிற்கட்சிக்கு கிட்டிய ஆசனங்களில் இருந்து 59 ஆசனங்களை அது இழந்துள்ளது,

தொடர்ந்து நான்காவது முறையாக தொழிற்கட்சி தோல்வியை சந்தித்த தேர்தல்களம் இது. இதனால் அந்தக்கட்சிக்கும் இது ஒரு வரலாற்று தோல்வியான தேர்தலாக அமைந்துள்ளது

இதனால் தான் அடுத்த பொதுத்தேர்தலில் தனது கட்சியை வழிநடத்தப்போவதில்லை என தொழிற் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பின் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கிடையில் தனது சொந்தக்கட்சியில் வழங்கப்படக்கூடிய அழுத்தங்களால் அவர் தனது தலைமை பொறுப்பிலிருந்து விலகவேண்டிய நிலையும் வரக்கூடும்.

ஏனெனில் இந்த படுதோல்விக்கான பொறுப்பை ஜெர்மி கோபைனின் தலைமைத்துவம் மீதே தொழிற்கட்சியின் உறுப்பினர்களில் கணிசமானோர் சுமத்தக்கூடும்.

ஆனால் தாம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்கள் பிரெக்ஸிட் பிரச்சனையால் மழுங்கடிக்கப்பட்டதாக தொழிற்கட்சி கூறுகிறது.

இதேபோல லிப்டெம் எனப்படும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோ சுவின்சனுக்கு இது ஒரு சோதனையான தேர்தலாக அமைந்துவிட்டது ஜோ சுவின்சன் தனது தொகுதியை ஸ்கொட்லாந்து தேசியகட்சியிடம் இழந்திருப்பதால் அவர் தனது தலைமைத்துவத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதேபோல பிரெக்ஸிற்குறித்து ஓயாது குரல் கொடுத்த நைஜல் பராஜ்ஜின் பிரெக்ஸிற் கட்சியும் ஒரு ஆசனத்தைகூட கைப்பற்றவில்லை.

அமெரிக்க அரசதலைவர் ரம்ப் வர்ணிப்பதைப்போலவே இது பொறிஸ் ஜோன்சனுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஆனால் இந்ததேர்தல் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு மட்டுமே உரிய ஒரு தேர்தல் அல்ல. ஆயினும் அதற்குரிய ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்த ஒரு தேர்தல் என்பதை ஐயத்துக்கு இடமின்றி கொள்ளலாம்

ஆனால் பிரெக்சிற்றை வெற்றிகரமாக கையாண்ட இந்த அரசியல் எந்திரனான பொறிஸ் ஜோன்ஸன் இனிமேல் தனது Get Brexit done என்ற பட்டயத்தை கைவிட்டபின்னர் பிரித்தானிய மக்களுக்கு தனது தேர்தல் விஞஞாபனத்தில் கூறியதை எல்லாம் நிறைவேற்றியாகவேண்டும்.

அதுதான் அரசியலில் இயந்திரனாக கூடிய பிரதமர் பொறிஸ் ஜோன்ஸனின் உண்மையான வெற்றியாகும்.

ad

ad