புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2019

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் புனையப்பட்டது- கோத்தா


இலங்கைக்கு எந்த தீங்கும் விளைவிக்கும் நோக்கம் சுவிஸர்லாந்துக்கு இல்லை என இலங்கையில் உள்ள சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மோக், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார்.

சுவிஸ் தூதுவர் இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

கடந்த நவம்பர் 25 ம் திகதி சுவிஸ் தூதரக ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது "கடத்தல் குற்றச்சாட்டு முற்றாக புனையப்பட்டது. தூதரகத்தின் ஆரம்ப எதிர் வினையாற்றலில் தவறில்லை. அது நியாயமானது. அவர்களது ஊழியர் சிக்கலில் இருந்தால் தூதரகம் தலையிட வேண்டும்" எனத் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ad

ad