புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜன., 2020

பத்தனையில் வைரஸ்? 175 பேர் வைத்தியசாலையில்

பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்கள் திடீர் சுகவீனமுற்றுள்ளனர்.
இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 03ம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்றையதினம் (29) சுமார் 100 பேரும் இன்று (30) 75 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். என்றும், இவர்களுக்கு கொட்டகலை, டிக்கோயா, கிளங்கன் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது என்றும் மருத்துவ அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் சிலருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி மாணவர்கள் எவ்வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பதை கண்டறிவதற்காக இரத்த, சிறுநீர் மாதிரிகள் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ad

ad