புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2020

கொரோனா தொற்று?கப்பலில் இருந்த 119 இந்தியர்கள், 5 வெளிநாட்டினர் என மொத்தம் 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்

. துணிச்சலாக களமிறங்கி தனி விமானம் மூலம் இலங்கையர்களை மீட்ட இந்தியா
டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 16 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகின்றது. சீனாவில் இதுவைரை 3000 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆனால் தற்போது சீனாவில் இறப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உலக நாடுகள் சிலவற்றில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள 16 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் இருந்து 3 ஆயிரத்து 700 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடந்த 4 ஆம் திகதி ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்துக்கு சென்ற டைமன்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து கப்பலில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் ஊழியர்கள், பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் 16 பேருக்கு (கப்பல் ஊழியர்கள்) கொரோனா பாதிப்பு இருந்தமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, வைரஸ் பாதிக்கப்படாத இந்தியர்களை உடனடியாக சொந்தநாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கும் படியும் ஜப்பான் அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து, வைரஸ் பாதிக்கப்படாத 119 இந்தியர்களை அழைத்து செல்ல ஜப்பான் அரசு அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து அந்த கப்பலில் இருந்த 119 இந்தியர்கள், 5 வெளிநாட்டினர் என மொத்தம் 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். மீதமுள்ள மூன்று இந்தியர்களின் மருத்துவ கண்காணிப்பு காலம் நிறைவடையாததால் அவர்கள் தனி விமானத்தில் அனுப்பி வைக்கப்படவில்லை.

டெல்லி அழைத்து வரப்பட்டவர்களில் 2 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். நேபாளம், தென் ஆப்பிரிக்கா, பெரு ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

டெல்லி அழைத்து வரப்பட்ட 124 பேரும் மானேசரில் உள்ள ராணுவ சிறப்பு மருத்துவ முகாமில், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட விடுதியில் கண்காணிக்கப்படுவார்கள். அதன்பின்னர் வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் 16 பேரும் ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவ்வப்போது விசாரித்துவருகின்றனர்.

ad

ad