புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2020

மெலிஞ்சிமுனை-புங்குடுதீவுஊரதீவு -பாணாவிடை சிவன் கோவில் கரை வரையான 500 ஏக்கர் கடல் அபகரிப்பு , தீவக கடலை EPDP இடமிருந்து காப்பாற்ற பெருமுயற்சி?

தீவகத்தின் காவலனாக டக்ளஸ் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டது போய் தற்போது தீவகத்தை அவரிடமிருந்து காப்பாற்ற அப்பகுதி பொது அமைப்புக்கள் பெரும்பாடுபட்டுவருகின்றன.

சீன முதலீட்டை அடித்தளமாகக் கொண்டு, தீவகத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த இலங்கையிலேயே பெரிய அளவிலான கடல் அட்டை வளர்ப்புத் திட்டம் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீன முதலீட்டில் இயங்கும் நிறுவனமான குயிலான், யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டியங்கும் விநாயகர் மிசன் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஊர்காற்வத்துறை பிரதேசசபை மற்றும் வேலணை பிரதேசசபைக்கு உட்பட்ட 500 ஏக்கர் கடற்பரப்பில் கடல் அட்டை வளர்ப்பு செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மெலிஞ்சிமுனை கடற்பரப்பில் உள்ள நரையாம்பிட்டி தொடக்கம், புங்குடுதீவில், ஊரதீவு -பானாவிடை சிவன் கோவில் கரை வரையான 500 ஏக்கர் கடல் பிரதேசத்திலேயே மேற்படி கடலட்டை வளர்க்க முடிவு செய்தனர். இந்த 500 ஏக்கர் கடைபரப்பில் தற்போது மெலிஞ்சிமுனை, புங்குடுதீவு, சுருவில் , சரவணை மற்றும் அம்பிகைநகர் மக்கள் கடற்தொழிலில் ஈடுபடுகின்றனர். கிட்டத் தட்ட மீன் பிடித்தொழில்சார் 1500 குடும்பங்களின் வாழ்வாதரமாக, அடித்தளமாக இக் கடற்பரப்பு திகழ்கிறது.

ஈபிடிபி-யின் முக்கியஸ்தர்கள் அனுசரணையுடன் இக் கடற்பரப்பைக் கொள்ளை அடிக்க திட்ட மிட்ட மேற்படி இரு நிறுவனங்களும், மெலிஞ்சிமுனை மக்களை தமக்கு ஆதரவாகத் திரட்ட முயன்றனர். ஆனால், அம்மக்கள் ஈபிடிபி மற்றும் நிறுவனங்களின் ஆசை வார்த்தைக்கும், மிரட்டல்களுக்கும் அடிபணியாது, "எமது கடல் தாயை எவரும் கொள்ளையிட முடியாது". "எமது வாழ்வாதாரதில் கைவைய்யாதே " போன்ற கோசங்களுடன் ஊரே திரண்டு போராடினர். இதற்கு ஆதரவாக, சமூக நலன் சார் சக்திகளும், இயற்கை பாதுகாப்பு ஆர்வலர்களும் மக்களுக்கு ஆதரவு வழங்கியதுடன், கடல் அட்டை வளர்ப்புத் திட்டம் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற தரவுகளை பிரச்சாரப்படுத்தினர். தற்போது இத் திட்டம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இது தற்காலிகமானதென ஈபிடிபி-யினர் கூறுகின்றனர்.

கடல் அட்டை வளர்ப்புத் திட்டம் மேற்கொள்ள தீர்மானித்திருக்கும் 500 ஏக்கர் கடற்பரப்பில் சல்லி, திரளி, கயல், சிறையா, கிளாக்கன் , கணவாய் , குழுவாய் நண்டு போன்ற மீனினங்கள் இனப்பெருக்கம் செய்யும் பிரதேசமாகும். - சீனா மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொழில் நுட்பத்தில்- மரபணு மாற்றம் செய்யப்பட்ட "கடலட்டை " குஞ்சுகள், இந்த திட்டத்தில் உபயோகிக்கப் படவிருக்கிறது. இதனால், இயற்கையாக நாம் கடலில் வாழும் கடலட்டை இனம் அழிந்து போகும். மேலும், கலப்பு ஏற்பட்டால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும். - கடலட்டை வளர்பிற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், கடல் சார் தாவரங்களான கண்ணா, கடற் அறுகு , கடற்தாளை மற்றும் பாசி இனங்களை பாதிக்கும் என எச்சரிக்கப்பட்டது.

ad

ad