புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2020

தீர்மானத்தில் இருந்து முழுமையாக விலகவில்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவின் அனுசரணையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இருந்து முழுமையாக விலகிக் கொள்ளவில்லை என்றும், 30/1 தீர்மானத்துக்கான இணை அனுசரணையில் இருந்தே இலங்கை விலகிக் கொள்ளவுள்ளதாகவும், வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவரத்தன தெரிவித்துள்ளார்.

இந்த இணை அனுசரணைக்கு இலங்கையின் அமைச்சரவையில் அனுமதி பெறப்படவில்லை என்பதை காரணம் காட்டியே அதில் இருந்து விலகுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் படையினருக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய தீர்மானத்துக்கு இலங்கை அனுசரணை வழங்க முடியாது என்ற நிலைப்பாடும் இங்கு கருத்திற்கொள்ளப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா இது தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இலங்கை இணை அனுசரணையில் இருந்து விலகுவதால் தீர்மானத்தின் நடைமுறையில் மாற்றம் இருக்காது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தநிலையில் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகுமானால் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு சர்வதேசம் கொடுக்கும் அழுத்தம் தீவிரமாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ad

ad