புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2020

மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவதற்கு சிறிலங்கா தீர்மானமாம்

இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து உடனடியாக விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆங்கில செய்தி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று காலை இது குறித்த விசேட கூட்டமொன்று சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் உட்பட முக்கிய அமைச்சர்களும் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பிலேயே உடனடியாக விலகும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடைமுறையில் உள்ள அரசியல் யதார்த்தங்களின் கீழ் அவற்றை செயற்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் உடன்படவில்லை என்பதாலேயே ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இரு தீர்மானங்களில் இருந்தும் விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அரசாங்கத்தின் இந்த முடிவை அடுத்தவாரம் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் உத்தியோகபூர்வமாக வெளியிடும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கு முன்னதாக ஜெனீவா பிரேரணையிலிருந்து விலகும் முடிவை அரசாங்கம் அமைச்சரவையிடம் சமர்ப்பித்து அதற்கான அனுமதியை பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ad

ad