புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2020

சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமான வரித்துறை மும்முரம் காட்டி வருகிறது.

சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை கடந்த 2017-ம் ஆண்டு சோதனை மேற்கொண்டது.

இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் அடிப்படையில் வருமான வரித்துறை நடத்திய விசாரணையில், 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சென்னை, கோவை, காஞ்சீபுரம், புதுச்சேரி, மதுரை போன்ற பல்வேறு இடங்களில் ரூ.1,674 கோடிக்கு சசிகலா சொத்துகள் வாங்கி குவித்தது தெரியவந்தது.

செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சொத்துகளை விற்பனை செய்தது யார்? யார்? என்பது குறித்தும் வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டது.

அந்த விசாரணையில், புதுச்சேரியில் உள்ள லட்சுமி ஜூவல்லர்ஸ் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான கேளிக்கை விடுதியை (ரிசார்ட்) ரூ.168 கோடிக்கு விற்பனை செய்ய ஒத்துக்கொண்டு சசிகலாவிடம் இருந்து செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக ரூ.148 கோடியை பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

பணத்தை பெற்றுக்கொண்ட போதும், தற்போது வரை அந்த கேளிக்கை விடுதி சசிகலா பெயருக்கு மாற்றப்படாமல் இருப்பதும், சசிகலாவிடம் இருந்து பெறப்பட்ட ரூ.148 கோடி லட்சுமி ஜூவல்லர்ஸ் நிறுவனம் மூலம் சம்பாதித்தது போன்று நிறுவனத்தின் உரிமையாளர் வங்கியில் அந்த பணத்தை டெபாசிட் செய்து இருப்பதும் வருமான வரித்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், லட்சுமி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை பினாமி சட்டத்தின் கீழ் முடக்குவதற்கு வருமான வரித்துறையின் பினாமி தடுப்புப் பிரிவு துணை கமிஷனர் யு.என்.திலிப் கடந்த மாதம் 20-ந் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தநிலையில் அந்த நகைக் கடை அதிபர் நவீன்பாலாஜி தங்கள் தரப்பு விளக்கத்தை கூறி, முடக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தற்போது ஐகோர்ட்டை நாடி உள்ளார்.

இதேபோன்று, சசிகலா பினாமி பெயரில் ரூ.1,674 கோடிக்கு செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் வாங்கிய சொத்துகளை முடக்குவதற்காக நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

ad

ad