புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2020

எட்டு பேர் பலி! ஈரான் எல்லைகளை அவசரமாக மூடியது துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக துருக்கி ஈரானுடனான தனது எல்லையை மூடியுள்ளது, ஈரானிய அதிகாரிகள் தங்கள் நாட்டில் வைரஸால் எட்டு பேர் இறந்ததாக அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எல்லை வாயில்களை மூடியதோடு ஈரானுக்கான தொடரூந்து மற்றும் விமான சேவைகளையும் நிறுத்த முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.



ஈரானில் 43 பேருக்கு கொரோனா தாக்கம் பரவியதாகவும், அதில் எட்டு பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

துருக்கியின் அவசர நடவடிக்கையை அடுத்து ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் நாடுகளும் ஈரான் எல்லைகளை மூடி போக்குவரத்து தொடர்புகளை நிறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ad

ad