புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2020

மதரீதியான பெயர் மாற்றமில்லை:அதிகாரிகளது தவறே காரணம்

ஊர்காவற்றுறை பிரதேச சபை எல்லைக்குள் பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகள் தொடர்பில் முன்னர் தயாரிக்க பட்ட வீதி பதிவு புத்தகத்தில் உள்ள வகையில் ஒவ்வொரு வீதிகளுக்கும் இலக்கங்கள் வழங்கபட்டு இருந்தமை குறிப்பிட தக்கது. இராணுவ கட்டுப்பாட்டு பகுதி மற்றும் ஆட்களற்ற பகுதி என்பன தவிர்த்து (முன்னைய யுத்த கால பகுதி) ஏனைய பகுதியில் இனம் காணபட்ட வீதிகள் பெயர் மற்றும் இலக்கங்கள் வழங்கப்பட்டு வீதி பதிவு புத்தகம் தயாரிக்கப்பட்டது.

2016 கால பகுதியில் வீதியினை அடையாளப்படுத்தும் முகமாக வீதிகளுக்கு இலக்க கல் நடும் பணி இடம்பெற்றது. பின்னர் வர்த்தமானி பத்திரிகையிலும் பிரசுரிக்க பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னரான அனைத்து இடங்களும் விடுவிக்கபட்ட நிலையில் போது மக்கள் மீள் குடியமர்ந்த வகையில் வீதி பெயர்கள் மீள் பரிசீலனை செய்யபட்ட போது புதிய வீதிகள் மற்றும் பிழையாக இனம் காணபட்ட வீதிகள் என்பன திருத்தத்துக்காக முன்வைக்கபட்டது. இது தவிர ஆதன வரி மதிப்பீடு இடம்பெற ஆயத்தம் செய்யும் முகமாக வீதிகளுக்கான பெயர் பலகை இடும் பணி இடம்பெற்ற போது வீதி பதிவு புத்தகம் மற்றும் உண்மையான வீதிகள் தொடர்பில் கள ஆய்வு செய்த வகையில் பல வீதிகள் வீதி பதிவு புத்தகத்தில் பதிய படவில்லை. பல வீதிகள் இல்லாமலே பெயர் குறிப்பிடபட்டு பதியபட்டு இருந்தமை இனம் கானபட்டு. அவை சரி செயும் வகையில் சில மாற்றங்கள் செய்யபட்டது அதன் போது சில வீதிகள் பெயர் மற்றம் செய்யபட்டது.

பெயர் மற்றம் செய்யும் போது குறித்த வீதி வாழ் மக்கள் பொது அமைப்புகள் ஆலோசனை அபிபிராயம் பெறப்பட்டு எந்த வித சிக்கலும் இல்லாமலே இடம் பெற்றது. குழப்பமான வீதிகள் இன்று வரை பெயர் மற்றம் செய்யப்படவில்லை.

இவை தவிர முன்னர் குறிப்பிட்ட வகையில் வீதிகளே இல்லாமல் பெயர் குறிப்பிடபட்டு இருந்த வீதிகளுக்கு வழங்கபட்ட வீதி இலக்கங்கள் புதிதாக பதியபட்ட வீதிகளுக்கு வழங்கபட்டது.

வீதி பெயர் பதிவு புத்தகத்தில் காணபட்ட உண்மையில் பிரதேசத்தில் காணப்படாத வீதி கதிரேசன் கோவில் முதலாம் ஒழுங்கை ற்குரிய இலக்கம் புனித மரியாள் வீதியில் ஆரம்பித்து சென் ஜோசெப் வீதியில் நிறைவடையும் புதிதாக பதியபட்ட புனித மரியாள் முதலாம் ஒழுங்கை என பெயரிடப்பட்ட வீதிக்கு வழங்கபட்டது.

அந்த வகையிலான மாற்றங்கள் தொடர்பிலே தினக்குரல் பத்திரிகையில் பெயர் மாற்றம் என குறிப்பிடபட்டு விளம்பரமாக பிரசுரிக்கபட்டு இருந்தது. எந்த வீதியின் பெயரும் மாற்றம் செய்யவில்லை. பெயர் குறிப்பிடப்பட்ட பதிவு இலக்கங்களுக்கான பெயர் மாற்றங்கள் தான் பத்திரிகையில் குறிப்பிடபட்டு இருந்தது. இங்கு எந்த வீதியும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே தகவல் எதையும் தெளிவில்லாமல் குழப்பத்தையும் சபைக்கு அபகீர்த்தியும் ஏற்படுத்த வேண்டாம் என அன்பாக கேட்டு கொள்கின்றோம்.

மத ரீதியான எந்த வித பேதங்களும் எமது சபையினால் மேற்கொள்ளப்படுவதில்லை. அனைவரும் சமமாகவே எம்மால் பார்க்கப்படுகின்றது. வீதி இலக்கம் மாற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விளம்பரம் பெயர் மாற்றம் என பிரசுரிக்கபட்டமை தொடர்பில் திருத்தமான பதில் விளம்பரம் விரைவில் செய்யப்படும்.

குறிப்பாக ஊர்காவற்றுறை முகாம் வீதியில் அமைந்துள்ள கதிரேசன் கோவில் வீதிக்கும் பண்ணை வீதியில் அமைந்துள்ள சென் மேரிஸ் வீதிக்கு எந்த தொடர்பும் இல்லை இரண்டுக்கும் இரண்டு கிலோ மீற்றர் வரையான தூர வித்தியாசம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எந்த சைவ வீதிகளும் கிறிஸ்தவ பெயரால் மாற்றம் செய்யப்படவில்லை என்பதே தெளிவு. எனவே உண்மையான நிலவரம் அறிந்து கொண்டு செயல்பட பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் பொது அமைப்புகளை தயவுடன் கேட்டு கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad