புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2020

ர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்

போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்." என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவுக்கான இயக்குநர் ஜோன் பிசர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரே ஜோன் பிசர் தனது டுவிட்டரில் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

"இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை வெளியேறுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் எவரும் ஏமாறக்கூடாது. போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள ராஜபக்சக்கள் பொறுப்புக்கூறுதலை முன்நகர்த்துவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை.எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad