புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2020

முன்னணி மீது அனந்தி பாய்ச்சல்
முகநூலில் இருக்கின்ற சில இளையோர்களைக் கொண்டு உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்னெடுக்கின்றனர் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஈழமக்கள் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முகநூலில் இருக்கின்ற சில இளையோர்களைக் கொண்டு உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்னெடுக்கின்றனர் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஈழமக்கள் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி புதிதாகத் தோற்றம் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியாக இருக்கின்ற நிலையில் பலதரப்பட்ட விமர்சனங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த புதிய கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாமை காரணமாக பல விமர்சனங்களை அவர்கள் முன்வைக்கின்றனர். அவர்களுடைய விமர்சனங்களுக்கு எம்மால் விளக்கம் சொல்வதற்கு அப்பால், எங்களுக்கு ஒரு பொதுவான எதிரியாக இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டவேண்டிய அரசாக இலங்கை அரசு இருக்கின்ற படியால் அது என்ன செய்கின்றது அதன் நடவடிக்கைகளுக்கு எதிராக எவ்வாறு போராடலாம் என்பதைச் சிந்திக்கின்றவர்களாகத்தான் நாம் இருக்கின்றோம்.

ஆனால் நான்கு, ஐந்து பேர் கொண்ட கூட்டாக எம்மைக் கூறுவதும் இந்தக் கூட்டணி மக்கள் மத்தியில் நிலைக்கப் போவதில்லை, தாங்கள்தான் மக்கள் மத்தியில் நிற்கப் போகின்ற கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியினராக தங்களை சித்தரித்துக் கொண்டு எங்களை விமர்சித்துக் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பலவாறாகப் பேசி வருகின்றனர்.

நான், விக்னேஸ்வரன் ஐயா எல்லோருமே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை ஒன்றாகவும் செயற்பாடு ஒன்றாகவும் உள்ளபடியால்தான் வெளியேறினோம் தவிர, ஆசனப் பங்கீட்டுக்காக அந்தக் கட்சியைவிட்டு வெளியேறியவர்கள் அல்ல.

மீண்டும் நாம் தெளிவாகக் கூறுகின்றோம் 2010ஆம் ஆண்டு கொள்கை, கொள்கை… என்று பேசிக்கொண்டிருக்கின்ற இதே முன்னணியினர், தங்களுக்கு இருந்த நாடாளுமன்ற ஆசனப் பங்கீடு காரணமாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்தியடைந்து கட்சியிலிருந்து வெளியேறினர். அவ்வாறு கொள்கை காரணமாக வெளியேறாமல் ஆசனப் பங்கீட்டுக்காக வெளியேறியவர் இன்று எம்மை சில முகநூல்கள் ஊடாக விமர்சிப்பதும் ஊடகங்கள் வாயிலாக விமர்சிப்பதும் மிகவும் மனவருத்தத்தை தருகின்றது.

ஏனென்றால் ஜனாநாயக ரீதியாக யாருமே அரசியலில் இறங்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றனது. ஏன் எதற்காக இவர்கள் குத்தி முறிந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை.

தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு மேலாக தாம் தேசியத்தில் கொள்கைப் பற்றுள்ளவர்களாக இருந்திருந்தால் ஓர் போர்க்குற்றவாளியான சரத் பொன்சேகாவை 2010ஆம் ஆண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எவ்வாறு கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டு ஆதரித்திருந்தார்.

போர்க்குற்றவாளியான மகிந்தவையும் ஆதரிக்கமாட்டேன், மைத்திரியையும் ஆதரிக்கமாட்டேன் என்று 2015ஆம் ஆண்டு நான் எடுத்துக் கொண்ட நிலைப்பாடுதான் என்னை கட்சியிலிருந்து விலக்குவதற்கு தீர்மானம் எடுக்கவைத்தது.

அதேபோன்று 2010ஆம் ஆண்டு வெளியாகிய விக்கிலீக்ஸில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தான் சர்வதேச விசாரணையைக் கோரவில்லை என்ற செய்தியையும் தெரிவித்தமை காணக்கிடைத்தது என்றார்.

ad

ad