புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2020

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த சிறிலங்கா சுகாதார அமைச்சு தீர்மானம்

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று காலை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஆகிய இரு தரப்பினரும் இந்தசெயற்பாடுகளுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

இதற்காகச் சிறிது காலம் தேவை என்றும் குறித்த பகுதியை இனங்காணக் குறிப்பிடத்தக்க சில காலம் தேவைப்படுவதாகவும் தெரிவித்த அனில் ஜாசிங்க அநேகமான வெளிநாட்டவர்கள் ஒரே நேரத்தில் வருகை தந்தால் அவர்கள் அனைவரும் அசௌகரியத்திற்கு முகங்கொடுக்க நேரிடும் என தெரிவித்தார்.

இதன் காரணமாக வெளிவிவகார அமைச்சின் ஊடாக தூதரகங்கள் மற்றும் நாடுகளுக்கு அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதனூடாக எதிர்வரும் நாட்களில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்

ad

ad