புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மார்., 2020

சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணிசின்னமாக பானையல்ல:மீன்

சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணிசின்னமாக பானையல்ல:மீன்
திடீர் தேர்தல் அறிவிப்பு காரணமாக சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி பானையினை கைவிட்டு மீன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

அவ்வகையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சின்னமாக ஜனாதிபதித் தேர்தலில் சிவாஜிலிங்கம் பயன் படுத்திய மீன் சின்னம் தேர்தல் ஆணைக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கே.சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக் குழுவிற்கு புதிய கட்சிகள் மற்றும் ஏற்கனவே உள்ள கட்சிகளின் பெயர் மாற்றம் தொடர்பில் முன்கூட்டியே விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய கட்சிகளின் பதிவுகளை ஏற்றுக்கொள்ள தற்போதைய சூழலில் சந்தர்ப்பம் கிடையாது என தெரிவிக்கப்பட்ட போதும் கட்சிகளின் பெயர் மாற்றம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் ஈ.பீ.ஆர்.எல்.எவ் இன் பெயரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என பெயர் மாற்றம் செய்ய சுரேஸ் பிறேமச்சந்திரன் செய்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும் அவர்கள் கோரிய நிறைகுடம் சின்னம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சின்னம் என்ன வகையில் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த கட்சியின் இணக்கத்துடன் தற்போது மீன் சின்னம் ஆணைக் குழுவினால் வழங்கப்பட்டுள்ளதாக சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

ad

ad