புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2020

தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் - நாளை அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் குறித்த விபரங்களை வரும் 6ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் குறித்த விபரங்களை வரும் 6ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, நல்லையா வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வேட்பாளர்களை வடக்கு கிழக்கு மாகாணங்களில் களமிறக்கவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ, புளொட் மற்றும் தமிழரசுக் கட்சிகள் உள்ள நிலையில் இதனுடன் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் இணைந்துள்ளது. இந்நிலையில் ரெலோ, புளொட் கட்சிகளின் வேட்பாளர்களை எவ்வாறு பங்கிடுவது என்பதை ஏற்கனவே தீர்மானித்து விட்டோம்.

தமிழரசுக் கட்சியைப் பொறுத்தளவில் கடந்த 23ஆம் திகதி கிளிநொச்சியிலே மத்திய குழுக் கூட்டத்தையடுத்து எங்களது தேர்தல் நியமனக்குழு கூடியது. இதன்போது, மாவட்டங்களில் இருந்து விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை முதல்தரமாக பரிசீலனை செய்து அதனை வரிசைப்படுத்தியுள்ளோம்.

எனவே வருகின்ற 6ஆம் திகதி தேர்தல் நியமனக்குழு கூடவுள்ளது. அன்றுதான் மாவட்டங்களில் யார் யாரை வேட்பாளர்களாக நிறுத்தப் போகின்றோம் என்ற முடிவை அறிவிப்போம்.

வடக்கு கிழக்குக்கு வெளியே போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.

இதேவேளை, வழமைபோல தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டு அதில் இதுவரை எதிர்நோக்கிய சவால்கள், அதனை எவ்வாறு கையாண்டோம், இனி வருகின்ற தேர்தலில் எந்த வியூகத்தில் செல்வது என்பதைத் தெரிவிக்கவுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ad

ad