புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2020

பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27% அதிகரிப்பு..! மூத்த அமைச்சர் வேதனை

பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளதாக மூத்த அமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை நிலவரப்படி நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் இறந்தவர்களை விட திங்கட்கிழமை 381 பேர் கூடுதலாக உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கடும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது என மூத்த அமைச்சர் மைக்கேல் கோவல் தெரிவித்துள்ளார்.

இறப்புகள் எப்போது அதிகரிக்கும் என்பதை கணிக்க முடியாது. அது நம்முடைய செயல்பாடுகளை பொறுத்தது. உயிரிழப்புகள் அதிகரிப்பதை தாமதப்படுத்தலாம், நம்முடைய சுய குறிப்பிட்ட செயல்களின் மூலம் குறைக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்

ad

ad